வாகனங்கள் வைத்திருக்கும் மக்களுக்கான முக்கிய அறிவித்தல் - எல்லோருக்கும் பகிருங்கள்
#SriLanka
#Import
#Traffic
Prasu
12 hours ago
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய வாகனப் பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்களின் உரிமை மாற்றங்கள் ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
புதிய உரிமையாளர் தனது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது வணிகப் பதிவு (Business Registration) இலக்கத்துடன் சேர்த்து, தனது TIN இலக்கத்தையும் திணைக்களத்தின் முறைமையில் உள்ளீடு செய்வது அவசியமாகும்.
(வீடியோ இங்கே )