சுவிஸ் மதுபான விடுதி விபத்து - உரிமையாளரின் தடுப்பு காவல் நீட்டிப்பு
#Death
#Arrest
#Switzerland
#Accident
#fire
Prasu
1 hour ago
புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் இறந்த ஸ்கை ரிசார்ட் மதுபான விடுதியின் இரண்டு இணை உரிமையாளர்களில் ஒருவரை 90 நாட்கள் காவலில் வைக்க சுவிட்சர்லாந்தில் உள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உரிமையாளர் ஜாக் மோரெட்டி வெளிநாட்டுக்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதாக சுவிஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷன் பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 116 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
கொண்டாட்டங்களின் போது ஷாம்பெயின் பாட்டில்களில் தீப்பிடித்ததால் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.
பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் உள்ள பாரில் ஐந்து ஆண்டுகளாக பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அதிகாரிகள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர்.
(வீடியோ இங்கே )