விமல் உடனடியாக வெளியேற வேண்டும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

#SriLanka
Mayoorikka
5 hours ago
விமல் உடனடியாக வெளியேற வேண்டும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒரு குழுவினர் அங்கு ஒன்றுகூடினர்.

 இதன்போது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்குமாறும் மாணவர்களின் கல்வியை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கடும் கோஷங்களை எழுப்பினர்.​


குறிப்பாக, "விமலே... பிள்ளைகளின் கண்களைத் திறக்கும் கல்வியை, உமது வயிற்றை நிரப்பும் ஒரு வியாபாரமாக மாற்றிக் கொள்ளாதீர்!", "கல்வி ஒரு உரிமை, அது ஒரு விற்பனைப் பண்டமல்ல" மற்றும் "எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை உமது லாபத்திற்காகப் பயன்படுத்தாதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

 கல்வியை ஒரு சந்தைப் பொருளாக மாற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், அடிப்படை உரிமையான கல்வியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.​இந்தப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நபர் ஒருவர், தாம் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆதரவாக இங்கு வரவில்லை எனவும், பொதுமக்களின் நலன் கருதியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். விமல் வீரவங்ச உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும், அவராக வெளியேறத் தவறினால் மக்கள் சக்தியால் அவர் வெளியேற்றப்படுவார் எனவும் அவர் எச்சரித்தார்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!