விமானத்தில் திருட்டில் ஈடுபட்ட சீனப்பிரஜை கட்டுநாயக்கவில் கைது!
டுபாயிலிருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணித்தபோது இலங்கைப் பெண்ணிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சீனப்பிரஜை கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கைப்பையில் 3,660 அமெரிக்க டொலர்கள், 500 யூரோக்கள் மற்றும் தங்க நகைகளையும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கிம்புலப்பிட்டியில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் வைத்து கைது செய்ததாகவும் அங்கு திருடப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் அவரிடம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபர் இன்று (14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்