கஜகஸ்தானில் விபத்தில் சிக்கிய இந்திய மாணவர்கள் குழு - ஒருவர் மரணம்
#Death
#Accident
#students
#Indian
#Kazakhstan
Prasu
17 hours ago
கஜகஸ்தானில் உள்ள செமே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த 11 மாணவர்கள் அல்டாய் மலைத்தொடர் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
இதில் 25 வயதுடைய மிலி மோகன் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஆஷிகா ஷீஜாமினி, ஜசீனா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )