அஹங்கமவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை!
#SriLanka
#Police
#Investigation
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
அஹங்கம, திட்டகல்ல பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.