அனுராதபுரத்தில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீட்பு!
#SriLanka
#Anuradapura
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 வெடிகுண்டுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (20.01) கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவற்றை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்