இன்றைய ராசிபலன் (21.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (21.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: வரவால் வளம் காணும் நாள். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எடுக்கும் முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். பரணி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கார்த்திகை பெரியோர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொன் பொருள் சேரும். பயணத்தில் லாபம் காண்பீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும் நாள். வழக்கத்தை விட இன்று விற்பனை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். ரோகிணி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப லாபம் உண்டு. மிருகசீரிடம் 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பாக இருப்பர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நேற்று இருந்த நெருக்கடி விலகும். மனத்தெளிவு ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும். திருவாதிரை: பெரிய மனிதர் சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும். ஆயில்யம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.

சிம்மம்

மகம்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். தொழிலில் லாபம் உண்டு. பூரம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்டு செயல்படுவீர். பயணம் ஆதாயம் தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகத் தொல்லை கொடுத்தோர் உங்களை விட்டு விலகுவர்.

துலாம்

சித்திரை 3,4: நன்மையான நாள். எண்ணம் நிறைவேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளில் தீர்வு ஏற்படும். சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். விசாகம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அனுஷம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். முயற்சித்தும் நடக்காமல் இருந்த வேலை இன்று நடக்கும். கேட்டை: பணிபுரியும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். அவசர வேலையால் நெருக்கடிக்கு ஆளாவீர். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

மூலம்: முயற்சியால் வெற்றியடையும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். பூராடம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழியில் மேற்கொண்ட வேலை முடியும். உத்திராடம் 1: பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நேற்று முடியாமல் இருந்த வேலை முடியும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். திருவோணம்: நேற்று இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடையும். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும்.

கும்பம்

அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். கையில் எடுத்த வேலை இழுபறியாகும். மனம் சோர்வடையும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். பெரியவர்களால் தைரியம் உண்டாகும். குழப்பமின்றி செயல்படுவீர்கள். பூரட்டாதி 1,2,3: வெளியூர் பயணம் லாபம் தரும். அலுவலகத்தில் நேக்கு போக்காக நடந்து கொள்வது நல்லது.

மீனம் 

பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி, இழுபறி உண்டாகும். உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலைபளு உண்டாகும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு கூடும். ரேவதி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!