நயன்தாரா கைதாவாரா? உதயநிதியின் கருப்பு பண விவகாரம்

#Actor #Actress #TamilCinema #Movie #Udayanidhi
Prasu
2 hours ago
நயன்தாரா கைதாவாரா? உதயநிதியின் கருப்பு பண விவகாரம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அமலாக்க துறையும், திமுகவை நோக்கி தன்னுடைய பார்வையை திருப்பி இருக்கிறது, கடந்த வருடம் அமலாக்க துறை டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு வெளியிட்டது.

இப்படி தமிழகத்தையே உலுக்கிய டாஸ்மாக் ஊழல் விவகாரம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து அமலாக்க துறை விசாரணையை தீவிரப்படுத்தி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பர்களான ஆகாஷ் பாஸ்கர், ரதீஸ், விக்ரம் ஜூ ஜூ ஆகியோரை நெருங்கியது, அமலாக்க துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இந்த மூவரும் தலைமறைவானார்.

இதில் வெளிநாடு தப்பி சென்ற ரத்தீஷ் டாஸ்மாக் ஊழலில் சிக்கிய மிக முக்கிய புள்ளியாக பார்க்கப்பட்டு யார் இந்த ரதீஸ் என்கிற விவாதம் அனல் பறந்தது. 

images/content-image/1769013631.jpg

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அடுத்து அமலாக்க துறை நடவடிக்கை எதுவும் எடுக்காதபடி, நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது, அந்த வகையில் தற்காலிகமாக அமலாக்க துறை இந்த விவகாரத்தில் யாரையும் கைது செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. 

இந்த விவகாரம் தாற்காலிகமாக சற்று அடங்கி இருக்கும் நிலையில், விரைவில் அடுத்தடுத்து அதிரடி நிகழ்வுகள் அரங்கேற இருக்கிறது.இதற்கு முன்பு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா டாஸ்மாக் மூலம் சுமார் 33 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று பேசியது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் அமலாக்கத்துறை இந்த விகாரத்தை மிக தீவிரமாக கையில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றம் விதித்துள்ள தடைகளை அகற்றுவதற்கான வேளைகளில் இறங்கியுள்ள அமலாக்கத்துறைக்கு சாதகமாக விரைவில் நீதிமன்றம் தடை நீங்கும் என்றும், இதன் பின்பு ஏற்கனவே டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்க துறை ரேடாரில் சிக்கியுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பர்களான ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ், விக்ரம் ஜூ ஜூ ஆகியரிடம் விசாரணை நடத்தி அமலாக்க துரை இவர்களை தட்டி தூக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

images/content-image/1769013667.jpg

இந்நிலையில் டாஸ்மாக் ஊழலில் சிக்கி இருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நண்பரான ரத்தீஷ் உடன் இணைந்து நடிகை நயன்தாரா கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேளையில் இறங்கி இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே துபாயில் நயன்தாரா முதலிடு செய்துள்ள நிலையில், தற்பொழுது ரதீஸ் கைவசம் இருக்கும் ஊழல் பணம் நயந்தாரா உதவியுடன் வெளிநாடுகளில் முதலீடு செய்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமலாக்க துறை மிக தீவிரமாக நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் இருவரையும் கண்காணித்து வருவதாக கூறப்படும் நிலையில் நயன்தாராவும் அமலாக்க துறை விசாரணையில் சிக்க வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!