கொள்ளுப்பிட்டியை உலுக்கிய துப்பாக்கிச்சூடு - 15 முறை சுடப்பட்டதாக தகவல்!
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையில் இன்று (25) காலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி காவல்துறையினரின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் டி-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி கட்டிடம் மற்றும் அதன் வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவத்தின் போது சுமார் 15 சுற்றுகள் சுடப்பட்டதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளில், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் கட்டிடம் மற்றும் வாயிலை நோக்கி ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் காணலாம்.
சம்பவத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.