கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் - 06 பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் ஆறு அதிகாரிகளை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த ஆறுபேரும் இன்று (25.01) கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று இரவு கிரிந்திவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிரியாரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோது ஏற்பட்ட தர்க்கம், இந்தத் தாக்குதலில் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பாதிரியார் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.