டித்வா' அனர்த்த பாதிப்பு: வீடுகளை நிர்மாணிக்க நன்கொடையாளர்களை தேடும் அரசாங்கம்

#SriLanka #government #Disaster #House #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
டித்வா' அனர்த்த பாதிப்பு: வீடுகளை நிர்மாணிக்க நன்கொடையாளர்களை தேடும் அரசாங்கம்

டித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவ்வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணிகளை அன்பளிப்புச் செய்வதற்கு நாடளாவிய ரீதியிலுள்ள நன்கொடையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், காணி நன்கொடையாளர்களின் விபரங்களை 0112331246 என்ற தொலைநகல் (Fax) இலக்கத்திற்கும் அனுப்பி வைக்க முடியும்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரஜையையும் கைவிடாது, அவர்களின் வாழ்க்கையை, முன்னைய நிலையை விட உயரிய மட்டத்தில் மீண்டும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மக்களுக்காக ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் நேரடியாக கைகோர்க்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நன்கொடையாளர்களுக்கும் இத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  https://www.lanka4.com/  ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!