தெற்கு கடலில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட படகுடன் ஐவர் கைது!
தெற்கு கடலில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட படகுடன் ஐவர் கைது! தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 290 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு படகையும் 5 சந்தேக நபர்களும் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டீலிஷ் 03 என்ற இந்த பல நாள் மீன்பிடிக் கப்பல், தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட மீன்பிடிக் கப்பல்களுக்கு போதைப்பொருட்களை வழங்கியது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை போதைப்பொருள் கொண்டு சென்றபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்கள் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
11 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்