ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை 9 மணிக்கு வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 'சிரிலிய' என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடத்தப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அழைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.