பிரான்ஸில் விரைவுப்படுத்தப்படும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை

#France #Social Media #President #Banned
Prasu
1 hour ago
பிரான்ஸில் விரைவுப்படுத்தப்படும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை

பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை அமுலுக்கு வருவதை விரைவுப்படுத்துமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் முன்மொழியப்பட்ட சட்டம் விரைவில் செனட் சபையில் நிறைவேற்றப்படுவதற்கு ஏற்ற வகையில், துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.

“நமது குழந்தைகள் மற்றும் நமது இளைஞர்களின் மூளை விற்பனைக்கு இல்லை என்றும், இளைஞர்களின் உணர்ச்சிகள் அமெரிக்க அல்லது சீன தளங்களால் கையாளப்படுவதற்கு இடமளிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் அதிகப்படியான திரை நேரத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட சட்டங்களை கடுமையாக்குவதால், சமூக ஊடகத் தடையை பரிசீலிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் அறிவிப்பை தொடர்ந்து மக்ரோனின் கருத்துக்கள் வந்துள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!