310,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!

#SriLanka #foreign #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
310,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயம் -  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!

2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, 77,500 பேர் கொண்ட மிகப்பெரிய குழு குவைத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 63,500 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், 44,000 பேர் கத்தாருக்கும், 31,000 பேர் சவுதி அரேபியாவிற்கும் மற்றும் 17 பேர் பிற நாடுகளுக்கும் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களின்படி செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ், 2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு 15,000, ஜப்பானுக்கு 12,500 மற்றும் தென் கொரியாவிற்கு 6,000 பேரை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!