பாடசாலை விடுமுறைகள் எப்படி இருக்கவேண்டும் : பிரதமர் ஹரிணியிடம் கொடுத்த மனு - சோதிடர் சுதாகர் சுவிஸ்
மார்கழி மாதத்தில் வருகின்ற பாடசாலை விடுமுறையையும், அத்தோடு வருகின்ற பரீட்சையையும் முடிந்த வரைக்கும் தை மாதத்திற்கு மாற்றுவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகச் சிறப்பாக அமையும்.
காரணம் இலங்கையில் ஆகக் கூடுதலாக மழைப் பொழிவு ஏற்படுகின்ற காலம், அதே வேளையில் மாணவர்களாலும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்களாலும் அந்த விடுமுறையில் விளையாடவோ அல்லது வேறு எங்கும் சென்று வரவும் உதவியாக இருப்பதில்லை.
இதேவேளை தை மாதத்தில் இந்த விடுமுறை வருமாக இருந்தால் கால போகத்தின் அறுவடைக்கு மாணவர்களை ஈடுபடுத்தவும், பெற்றோர்கள் அதில் ஈடுபடவும் மிகவும் வசதியாக இருக்கும் என்பதும் எனது தாழ்மையான கருத்து.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் ஆடி, ஆவணி(ஜூலை, ஆகஸ்ட்) மாதங்களில் இலங்கைக்கு வருவதால் அந்தக் காலங்களில் குறைந்தபட்சம் இரண்டு வாரமாவது பாடசாலை விடுமுறை இருந்தால் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவுகளோடு உறவாடவும், சுற்றுலா செல்வதற்கும் வசதியாக இருக்கும்.
மற்றும் இலங்கையர் தினம் இந்தக் காலப்பகுதியில் கொண்டாடப்படுவதும் எல்லா மக்களும் ஒன்று சேர்வதற்குப் பொருத்தமான கால நிலையாகவும், அதே வேளையில் வெளிநாடுகளில் இருப்பவர்களும் பங்கு பெறக் கூடிய வகையில் அமையும்.

சித்தர் சோதிட நிலையம் சூறிச் www.cittarastro.ch
(வீடியோ இங்கே )