இன்றைய ராசிபலன் (02.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்களின் விருப்பம் நிறைவேறும். பரணி: தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். ரோகிணி: பணியிடத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தேவை பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். பேச்சில் கவனம் தேவை. திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புனர்பூசம் 1,2,3: பெரியோரின் உதவி கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
கடகம்
புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பூசம்: முயற்சியில் வெற்றி உண்டாகும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். ஆயில்யம்: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை.
சிம்மம்
மகம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவது நன்மையாகும். உத்திரம் 1: பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.
கன்னி
உத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். சித்திரை 1,2: பணியிடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
சித்திரை 3,4: பிரச்னைகளை சரி செய்வீர். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம். சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். பணியாளர்களுக்கு நெருக்கடி நீங்கும்.
விருச்சிகம்
விசாகம் 4: தந்தைவழி உறவினரால் உங்களது வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். கேட்டை: உங்களது வேலைகளில் மற்றவர்கள் தலையிட இடம் கொடுக்காதீர்கள்.
தனுசு
மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். பூராடம்: பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். உத்திராடம் 1: வெளியூர் பயணத்தில் சங்கடம் ஏற்படும். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். திருவோணம்: நண்பர்கள் ஆலோசனை நன்மை தரும். குடும்ப பிரச்னைகள் தீரும். அவிட்டம் 1,2: உறவினர் உதவியால் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கும்பம்
அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
மீனம்
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர்.
உத்திரட்டாதி: பணியிட பிரச்னையை சரி செய்வீர். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்னை தீரும்.
(வீடியோ இங்கே )