பொத்துவில் முதல் மட்டக்களப்பு வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் - மீனவர்களின் கவனத்திற்கு!
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மணிக்கு 25-35 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.