தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும்..

#SriLanka #people #Power #Country #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும்..

“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “தேசத்தின் சுதந்திர நாளென்பது வரலாற்றின் ஒளியடையாளமான நாளாக மட்டுமின்றி, எதிர்காலத்தின் மறுமலர்ச்சி யுகத்திற்கான உறுதிமொழியாகவும் திகழ்கிறது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும். மக்களுக்கு விரைவில் உண்மையான சுதந்திரக்காற்றை அனுபவிக்கக்கூடிய சூழல் உருவாகும். சுதந்திரம் அதிகாரவர்த்தகத்திற்காக அல்ல, மக்களுக்கு உரியதாகும். 

அதை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்த எமது ஆட்சியில் இடமில்லை. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழும் நிலையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சிறப்பு நாள் நாட்டின் மறுமலர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும், அனைத்து இலங்கையர்களுக்கும் ஒருமை உணர்வையும் ஏற்படுத்தும் நாளாகவும் இருக்கும். 

சுதந்திரத்தை மதிப்பதும், பாதுகாப்பதும், வளர்ப்பதும் எமது கடமையாகும்." - என்றுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!