தூய்மை பணியாளருக்கு தங்க செயினை பரிசாக வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்
#Actor
#TamilCinema
#RAJINIKANTH
Prasu
5 hours ago
சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மையாளர் கடந்த 11 ம் திகதி தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த போது குப்பையில் இருந்த பொதி ஒன்றில் 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார்.
இதை அடுத்து அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையில் ஒப்படைத்தார். ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி பொன்னாடை போர்த்தி தங்க செயினை பரிசாக அளித்துள்ளார்.
மேலும் பத்மாவுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
(வீடியோ இங்கே )