இலங்கையின் சுதந்திர தினம் என்பது கறுப்பு நாள் - தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன்

#SriLanka #Jaffna #Student #Protest #Director #Independence #South Indian
Prasu
1 hour ago
இலங்கையின் சுதந்திர தினம் என்பது கறுப்பு நாள் - தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன்

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமட்ட ஒரு கறுப்பு தினம் எனவும், சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கறுப்பு தின போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திரம் பெற்ற இலங்கை தேசம் வேண்டும் என்ற அடிப்படையில் உறுதியாகவும், உக்கிரமாகவும் போராடிய பங்கு தமிழர்களுக்கும் உண்டு. இந்திய ஒன்றியத்திலும், இலங்கையிலும் தமிழ் தலைவர்களின் போராட்டமும் சுதந்திரத்துக்கு காரணமாக அமைந்தது.

அந்தவகையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பொன்.அருணாசலம், பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், ஈ.எம்.வி.நாகநாதன் உள்ளிட்ட பல தலைவர்கள் அன்று சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

images/content-image/1770144135.jpg

இவ்வாறு தமிழ் தலைவர்கள் இணைந்து வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக் கொண்டாலும் ஒரு சில தமிழ் தலைவர்களின் சூழ்ச்சிகளாலும், புரிதலற்ற நிலைகளாலும் "ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாக இருக்கலாம்" என்று கூறிய கருத்தினால் இன்று ஈழ தேசத்தில் வாழ்கின்ற மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.

எல்லாள மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் - சிங்களம் என அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து சிறப்பான ஆட்சியை முன்னெடுத்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் ஒட்டுமொத்த இலங்கையையும் ஆண்டார்கள்.

இவ்வாறான பின்னணியில் இன்று தமக்கான சுதந்திரத்தை கேட்டு போராட வேண்டிய நிலைக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆயுதப் போராட்டமானது அடக்குமுறைகளை எதிர்த்தும், தமக்கான சுதந்திரத்தை வலியுறுத்தியுமே மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டது. 

images/content-image/1770144153.jpg

தமிழர்களின் விடிவுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டமும் மௌனிக்கபட்டமை தமிழ் மக்களுக்கு ஆகப்பெரும் இழப்பு. பேச்சளவில் சுதந்திரம் பெற்ற ஈழ தேசத்தில் உலகெங்கிலும் நடக்காத நிலம் இழப்பு, உரிமை இழப்பு அதிகார இழப்பு, மானம் இழப்பு, உயிர் இழப்பு, பொருள் இழப்பு போன்றவற்றை வரலாற்றுக்குரிய தமிழினம் அனுபவித்தது, தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு அறம்மிக்க தலைவன் முப்படையையும் கட்டி, உலகம் வியக்கும் வகையில் ஆண்டு வந்த அந்த நிலையை பொறுக்க முடியாத இலங்கை அரசானது, நாம் வாழ்கின்ற இந்திய தேசம் உள்ளிட்ட பல வல்லரசுகளுடன் இணைந்து இலட்சக்கணக்கான மக்களையும், பல்லாயிரக்கணக்கான அந்த காவல் தெய்வங்களையும் அழித்து, தாயக மண்ணில் வெறியாட்டமாடியது.

இவ்வாறான பின்னணியில் இந்த சுதந்திரதினம் என்பது கலப்படமற்ற ஒரு கறுப்பு தினம் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் கழிந்தும் அந்தப் பேரவலத்திற்கு நீதியாக ஒரு சிறு வெளிச்சம் கூட கண்களில் தென்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது தொப்புள் கொடி இனத்திற்கு இது கறுப்பு தினமே.

images/content-image/1770144170.jpg

வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணர்களான எமது பிள்ளைகள் இணைந்து இந்த சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் சார்பில் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஈழ தேசத்தில் சுயாட்சி மற்றும் சுயநிர்ணயம் போன்ற இலக்கினை நோக்கி பயணிக்க கூடிய சக்தி பல்கலைக்கழக மாணவர்களிடமே உள்ளது. 

எம் தொப்புள்கொடி உறவுகளின் விடிவுக்கான ஒரு தொடக்கப் புள்ளியாக மாணவர்களின் இந்த முயற்சி அமைய வேண்டும் என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!