இன்றைய ராசிபலன் (04.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (04.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். பரணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். ரோகிணி: வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நன்மையாகும். மிருகசீரிடம் 1,2: செயலில் ஆதாயம் தோன்றும். பணியாளர் நிர்வாகத்தினர் சொல்படி நடப்பது நல்லது. 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர். திருவாதிரை: நினைத்த வேலைகளை முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும். புனர்பூசம் 1,2,3: குடும்ப நெருக்கடி நீங்கும். வேலைகளில் மட்டும் கவனமாக இருங்கள். 

கடகம்

புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். பண வரவில் இருந்த தடைகள் விலகும். பூசம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணியிடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். ஆயில்யம்: உங்களது பேச்சாற்றல் இன்று கை கொடுக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்

மகம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். பூரம்: அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். பிறர் உங்களை விமர்சனம் செய்வர். உத்திரம் 1: குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். மனதில் ஏதேனும் ஒரு குறை இருக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வேலைகளில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர். சித்திரை 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதும், திட்டமிட்டுச் செயல்படுவதும் நன்மையாகும்.

துலாம்

சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திப்பர். சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். நண்பர்கள் ஆதரவால் மனம் தெளிவடையும்.

விருச்சிகம்

விசாகம் 4: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். வரவு திருப்தி தரும். அனுஷம்: மற்றவர்களை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். கேட்டை: வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும். 

தனுசு

மூலம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். பூராடம்: பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். உத்திராடம் 1: பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயலில் வெற்றி காண்பீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்களை சங்கடப்படுத்துவர். திருவோணம்: மனம் குழப்பம் அடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்

அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சதயம்: உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டவர்கள் இன்று மனம் மாறுவர். பூரட்டாதி 1,2,3: கூட்டுத் தொழில் லாபம் அடையும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: வியாபார பிரச்னை தீரும். உங்கள் கனவு நனவாகும். வழக்கு சாதகமாகும். ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்டநாள் பிரச்னை இன்று முடியும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!