இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்; ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

#SriLanka #Independence #President #celebration #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்; ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (4) ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வுகள் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 8 மணிக்கு சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் சுதந்திர சதுக்க வளாகத்திற்கு வருகைத் தந்தார். அவரை பிரதமர் ஹரிணி அமரசூரிய வரவேற்றார்.

கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!