உலகின் அதிவேக மனித ரோபோவை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம்

#China #Robot #technology #World
Prasu
1 hour ago
உலகின் அதிவேக மனித ரோபோவை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம்

உலகின் அதிவேக மனித ரோபோ போல்ட்டை ஜெஜியாங் பல்கலைக்கழகம் மற்றும் ஷாங்காய் ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஜிங்ஷி டெக்னாலஜி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது. இது ஒரு மனித உருவ ரோபோ எட்டியுள்ள அதிகபட்ச வேகமாகும்.

175 சென்டிமீட்டர் உயரமும், 75 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த 'போல்ட்' ரோபோ, மனிதர்களைப் போன்றே முழு உருவ அமைப்பைக் கொண்டுள்ளது.

images/content-image/1770236389.jpg

ஏற்கனவே நான்கு கால்களில் ஓடும் ரோபோவை உருவாக்கி சாதனை படைத்த சீனக் குழுவினர், தற்போது இரண்டு கால்களில் ஓடும் இந்த அதிநவீன ரோபோவை உருவாக்கி ரோபோடிக்ஸ் துறையில் மைல்கல் எட்டியுள்ளனர்.

சிக்கலான நிலப்பரப்புகளில் வேகமாக இயங்குவதற்கும், எதிர்காலத்தில் பல்வேறு மனிதப் பணிகளுக்கு உதவுவதற்கும் இத்தகைய அதிவேக ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல் துறையில் சீனாவின் இந்த கண்டுபிடிப்பு, மனித உருவ ரோபோக்களின் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!