முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் வழக்கில் நவம்பர் 11ஆம் திகதி தீர்ப்பு!
#SriLanka
#Minister
#LANKA4
#Case
#Court
Abi
56 minutes ago
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர வாகனத்தை வைத்திருந்தமை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த ஆடம்பர வாகனம் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வழக்கு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வழங்கவுள்ளதாக நீதவான் அறிவித்துள்ளார்.