பிரதமர் மோடியின் மதுரை விஜயத்தில் திடீர் மாற்றம்
#India
#Election
#NarendraModi
#madurai
Prasu
3 months ago
தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை பரபரப்பாக நடத்தி வருகின்றன. அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில், இம்மாதம் 28ம் திகதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருந்தார்.
இந்நிலையில், இந்த பயணத்தில் மாற்றம் ஏற்பட்டு மார்ச் 1ம் திகதி பிரதமர் நரேந்திரமோடி மதுரை வர இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )