நாடாளுமன்றத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண் உறுப்பினர்கள் - கோரிக்கை முன்வைப்பு!

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
11 hours ago
நாடாளுமன்றத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண் உறுப்பினர்கள் - கோரிக்கை முன்வைப்பு!

 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்யும் அல்லது அவமதிக்கும் வகையில் பிற உறுப்பினர்கள் செயற்படுவது அல்லது அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க  நாடாளுமன்ற நிலையாணைகளைத் திருத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் உட்பட மன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்தக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது மக்களின் இறையாண்மைக்கும், பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசியலில் பங்கேற்கவும் உள்ள உரிமைக்கும் ஒரு சவால் என்று மன்றம் வலியுறுத்துகிறது.

அத்துடன் இது ஒட்டுமொத்த சமூகத்திலும் அரசியலில் பெண்கள் தீவிரமாக பங்கேற்பதற்கு எதிர்மறையான முன்னுதாரணமாகவும் அமையும் என்று நாடாளுமன்ற தொடர்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே, ஆண் மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் எந்தவொரு நடத்தை அல்லது அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முன்மொழிந்துள்ளது. 

 மேலும், இந்த முன்மொழிவில், நிலையியற் கட்டளைகளின் கீழ் "பாராளுமன்றத்தில் ஒழுக்கம்" என்ற பிரிவின் மூலம் இதைச் செயல்படுத்தலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!