நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் மூவர் பலி!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் மூவர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒரு இளைஞன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியில் கெக்கிராவ மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, சியம்பளாண்டுவ வீதியில் மின்னிமரு சந்திக்கு அருகில் காய்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி, எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 

உயிரிழந்தவர் தல்கஸ்பிட்டிய, ஹபலன்காவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர். விபத்து தொடர்பாக லாரியின் ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் காலி-கொழும்பு பிரதான வீதியில் ரண்டோம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளார். 

பலப்பிட்டிய நோக்கிச் சென்ற வேன் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

 விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்து, பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அலுத்வல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார். 

மேற்படி விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!