மடகாஸ்கரை தாக்கிய கசானி புயல் - 9 பேர் மரணம்

#Death #people #Cyclone #Madagascar
Prasu
1 month ago
மடகாஸ்கரை தாக்கிய கசானி புயல் - 9 பேர் மரணம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர் தீவை கசானி என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியுள்ளது.

இந்த புயல் காரணமாக அட்சினானா மாகாணத்தில் பலத்த காற்றுடன், கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழை, புயல் காரணமாக பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

புயல் காரணமாக பொதுமக்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மடகாஸ்கரை தாக்கிய கசானி புயலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!