இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த வங்கதேச புதிய அரசாங்கம்
வங்காளதேசத்தின் 13வது நாடாளுமன்ற தேர்தல் பிப்ரவரி 12ம் திகதி நடைபெற்று முடிந்தது. 10 லட்சம் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடந்தது.
மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சுயேச்சைகள் உள்பட 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சிக்கும், பாகிஸ்தானுக்கு ஆதரவான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
59.44 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது.
அதில், வங்காளதேச தேசியவாத கட்சி 200க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. வங்காளதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்றால், கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் பிரதமர் ஆவார் என்று தேர்தலுக்கு முன்பே அக்கட்சி அறிவித்திருந்தது.
எனவே, புதிய பிரதமராக தாரிக் ரகுமான் பதவியேற்பார் என்று தெரிகிறது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு நாடுகடத்த வேண்டும் என்று வங்காளதேச தேசியவாத கட்சி வலியுறுத்தியுள்ளது.
“ஷேக் ஹசீனாவை முறையான விசாரணைக்கு உட்படுத்த வங்காளதேசத்திற்கு நாடுகடத்த இந்தியாவை எங்கள் கட்சி முறையாக வலியுறுத்தும். வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே இந்த விவகாரத்தை முன்னெடுக்க தொடங்கியுள்ளார். சட்டப்படி அவரை நாடுகடத்துமாறு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்" என்று கூறினார்.
(வீடியோ இங்கே )