ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம் - அரசமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்!

#India #SriLanka #jeishankar #jvp
Thamilini
1 hour ago
ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம் -  அரசமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்!

ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா கொண்டுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. 

 13 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்தப் பயணத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் 

 அதிகாரபூர்வ பயணமாக இந்தியா சென்றிருந்த அவர்,  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரை ரில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரை  சந்தித்தனர். 

அத்துடன் இதன்போது 3 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள பதிவில்,  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'அயலவருக்கு முதலிடம்' மற்றும் 'மஹாசாகர்' தொலை நோக்குப் பார்வையின் கீழ் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு இங்கு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அந்தஅறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!