தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 13 உலக நாடுகளுக்கு அழைப்பு
#Election
#Country
#Bangladesh
#World
#sworn
Prasu
3 hours ago
2024ல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல்முறையாக நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.
இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.
(வீடியோ இங்கே )