பாலிவுட் இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு - 6 பேர் கைது

#Arrest #Director #GunShoot #Mumbai #Bollywood
Prasu
4 months ago
பாலிவுட் இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு - 6 பேர் கைது

பிப்ரவரி 1ம் திகதி இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்மநபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்பட்டது.

சம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் புனேயில் கைது செய்தனர். எனினும் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளி தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டவர் உள்பட தாக்குதலில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளி தீபக் சர்மா உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். 

இந்த விசாரணையில் ரோகித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதன் பின்னணி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4