சமன் ஏக்கநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று - பிணை வழங்கப்படுமா?
#SriLanka
#Ranil wickremesinghe
#Court
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்கு நிதியுதவி அளித்ததன் மூலம் தொடர்புடைய குற்றத்திற்கு உதவியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையில் அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கமைய குறித்த வழக்கு இன்று மீள விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது. இன்றைய அமர்வின்போது அவரது பிணை மனு மீதான உத்தரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்