சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுதலை!
#SriLanka
#Court Order
#Ranil wickremesinghe
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது என்று அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சமன் ஏக்கநாயக்கவை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்