மின்சார கட்டண உயர்வு - அரசின் தவறால் இழப்புக்களை சுமக்கும் மக்கள்!
#SriLanka
#Electricity Bill
Thamilini
1 month ago
புதிய எரிசக்தி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் குறைந்தபட்ச மின்சார கட்டணம் அதிகரிக்கும் என்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளையும் மக்கள் சுமக்க வேண்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையில், நிலக்கரி ஊழலுக்கு காரணமானவர்கள் மீது அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மின்சார பயனர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல வலியுறுத்தியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்