இந்திய பிரதமரை சந்தித்த கூகிள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை

#India #PrimeMinister #google #CEO #NarendraModi
Prasu
4 months ago
இந்திய பிரதமரை சந்தித்த கூகிள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார்.

AIயில் இந்தியா செய்து வரும் பணிகள் மற்றும் இந்தத் துறையில் நமது திறமையான மாணவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கூகிள் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்து விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை நாட்டின் சேவை மற்றும் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது.

இந்த துறைக்கு செயற்கை நுண்ணறிவு ஒரு மகத்தான சவாலையும் வாய்ப்பையும் முன்வைக்கிறது.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அவுட்சோர்சிங் அலைகளால் இந்தியாவின் ஐடி துறை 2030ம் ஆண்டுக்குள் 400 பில்லியன் டாலர்களை எட்டும் என்று ஏஐ சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன’’ என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4