பெண்களுக்கு எதிராக மேலும் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய தலிபான் அரசாங்கம்

#Taliban #Women #Attack #Law
Prasu
5 hours ago
பெண்களுக்கு எதிராக மேலும் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய தலிபான் அரசாங்கம்

ஆப்கானிஸ்தானில் 2021 முதல் ஆட்சி நடத்தி வரும் தலிபான் அரசு பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக உரிமைகளை நிராகரித்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது குடும்ப வன்முறையை தாலிபான் அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

ஒரு ஆண் தனது வீட்டில் உள்ள பெண்ணையோ அல்லது குழந்தையையோ தாக்கும்போது, இரத்தம் வராமலோ அல்லது எலும்பு முறிவு ஏற்படாமலோ இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது.

அதாவது, வெளிப்படையான காயங்கள் இல்லாதவரை எவ்வளவு வேண்டுமானாலும் வன்முறையில் ஈடுபடலாம். ஒருவேளை கணவர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதைப் பெண் நீதிமன்றத்தில் நிரூபித்தால், கணவருக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமானால், அவருடன் கண்டிப்பாக ஒரு ஆண் வர வேண்டும்.

மேலும், நீதிபதியிடம் தனது காயங்களைக் காட்டும்போது கூட உடல் முழுவதையும் மூடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!