மனைவியை பிரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், நான் யாரென்றே எனக்குத் தெரியாத வயதில், எனது மதிப்பு என்னவென்று உணராத நிலையில், நான் கட்டியெழுப்ப விரும்பிய வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே நான் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன்.
அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நான் எதிர்பார்க்காத பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.இன்றுடன் எனது வாழ்வின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.
மேலும், தான் இளம் வயதிலேயே திருமணம் செய்துவிட்டதாகவும், இது ஒரு முடிவு அல்ல, தன்னை மீண்டும் கண்டுபிடிக்கும் விடுதலைக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் சாஹர், தனது நீண்ட நாள் காதலியான இஷானி ஜோஹரை கடந்த 2022ம் ஆண்டு கோவாவில் கரம் பிடித்தார்.
அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராகுல் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )