நாடளாவிய ரீதியில் கனமழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நாடளாவிய ரீதியில் கனமழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாகவும், இன்று (21) மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி,  வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

அதேநேரம் பிற இடங்களில்  பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

சில பகுதிகளில் 75MM மழைவீழச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!