டெல்லி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில், AI மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.
மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்களின் பங்கேற்புடன் AI தாக்கம் 2026 மாநாடு புது தில்லியில் நடைபெற்றது,
இந்த மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சிறப்புரையாற்றியிருந்தார். மேலும் மனிதகுலத்தின் கலாச்சார மதிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், உச்சிமாநாட்டின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி இரவு நாடு திரும்பியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்