நாட்டின் ஒரு சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நுவரெலியா மாவட்டம் மற்றும் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு முன்னர் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) நீட்டித்துள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று (21) காலை 8.00 மணியில் இருந்து அடுத்த 24 மணி நேரத்திற்கும் அமலில் இருக்கும் என்று NBRO அறிவித்துள்ளது.
பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை 2 (ஆம்பர்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:
நுவரெலியா மாவட்டம்: • நில்தண்டஹின்ன • வலப்பனே
பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:
பதுளை மாவட்டம்: • மீகஹகிவுல • கண்டகெட்டிய
நுவரெலியா மாவட்டம்: • மதுரட்ட • ஹங்குரன்கெத்த
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்