நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #weather #Warning #Flood
Thamilini
4 hours ago
நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

மகாவலி ஆற்றுப் படுகையின் பல தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கும் செல்லுப்படியாகும் வகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு பொலன்னறுவை சாலை (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விஹாரைக்கான அணுகல் பாதை மற்றும் சோமாவதிய ரஜ மகா விஹாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, சோமாவதிய ரஜ மகா விஹாரைக்குச் செல்லும் பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!