மண்சரிவு எச்சரிக்கை புதுப்பிப்பு : ஆபத்தில் உள்ள பிரதேசங்கள்!!

#SriLanka #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 hours ago
மண்சரிவு எச்சரிக்கை புதுப்பிப்பு : ஆபத்தில் உள்ள பிரதேசங்கள்!!

மண்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (22) காலை 09.30 மணி முதல் நாளை காலை 08.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 இதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுநுவர, கங்கை இஹல கோரள, டோலுவ, யட்டிநுவர, கேகாலை, யட்டியந்தோட்டை, மாவனெல்ல, தெஹியோவிட்ட, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, லக்கல பல்லேகம, மத்தோகுகல கோரால, மாத்தோகுகல கோரால ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவித்தல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 பதுளை மாவட்டத்தில் மீகஹகிவுல, கந்தேகெட்டிய, ஹப்புத்தளை, பசறை மற்றும் பண்டாரவளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல, உடபலத, உடுநுவர, பத்தஹேவஹெட்ட ஆகிய பகுதிகளும், கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரள, தெரணியகல, கெளத்கலபிட்டி, கெளத்கலபிட்டி மாவட்டத்தில் உள்ள புளத்கொளேஹு  ஆகிய பகுதிகளிலும் உயர் எச்சரிக்கையில் உள்ளன. 

மேலும் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய, மதுரட்டை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரக்கேத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, நிவித்திகல, எஹலியகொட மற்றும் கொலொன்ன பிரதேச செயலாளர் பிரிவுகளும், 

 பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் நியாகம, மெததும்பர, கண்டி மாவட்டத்தின் பாததும்பர, மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, நிலந்தஹின்ன, வலப்பனை, நோர்வூட், அம்பகமுவ, நுவரெல்லா மாவட்டத்தின் கிரியாம, கலையாவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!