இன்றைய ராசிபலன் (27.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 day ago
இன்றைய ராசிபலன் (27.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பீர். எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். பரணி: உடலில் இருந்த சங்கடம் விலகும். செயலில் வேகம் இருக்கும். வியாபாரம் விருத்தியாகும். கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். சிலருக்கு வெளியூர் பயணம் லாபம் தரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பண நெருக்கடி நீங்கும். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உதவி என கேட்டவருக்கு இயன்றதை செய்வீர். செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: சுயதொழிலாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: . செயல்களில் உற்சாகமும் லாபமும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலை முடியும். பணம் வரும் நாள். திருவாதிரை: கவனமாக செயல்படுவதால் சங்கடங்களைத் தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். புனர்பூசம் 1,2,3: உழைப்பால் உயர்வீர்கள். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கையில் பணம் புரளும்.

கடகம்

புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படும். ஆயில்யம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மனக்குழப்பம் விலகும். விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்

மகம்: லாபமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தேவைகளை நிறைவேற்றுவீர். உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். சுயதொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர். அஸ்தம்: உங்கள் முயற்சி லாபத்தை வழங்கும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர். சித்திரை 1,2: விருப்பமும் எதிர்பார்ப்பும் எளிதாக பூர்த்தியாகும் நாள். செய்து வரும் தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

துலாம்

சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் கூடும். வழிபாட்டில் பங்கேற்பீர். சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: நேற்றைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். தினப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும்.

விருச்சிகம்

விசாகம் 4: தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலையை முடியும். அனுஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனம் குழப்பம் அடையும். கடன் கொடுத்தவர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். கேட்டை: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும். முயற்சி வெற்றியாகும்.

தனுசு

மூலம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். பூராடம்: நேற்றைய முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறி வேலை முடியும். உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உற்சாகமான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வியாபார போட்டியாளர் பலமிழப்பர். திருவோணம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவுடன் தடைபட்ட வேலை நடக்கும். அவிட்டம் 1,2: பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். சட்ட ரீதியாக பிரச்னையை எதிர் கொள்வீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்ட வேலை எளிதாக நடக்கும். சந்திக்க விரும்பியவரை சந்திப்பீர். சதயம்: உறவினர் உதவியுடன் வேலை நடக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். நிம்மதியான நாள். பூரட்டாதி 1,2,3: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவு பெறும்.

மீனம்

பூரட்டாதி 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரட்டாதி: குடும்பத்தில் எதிர்பாராத செலவு தோன்றும். தேவையற்ற சிந்தனை மேலோங்கும். ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவு ஆதரவால் நினைத்த வேலை நடக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!