தி.மு.கவில் இணைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
#India
#Election
#M. K. Stalin
#Politician
Prasu
2 months ago
தமிழகத்தின் முன்னாள் முதல்வாரன அ.தி.மு.கவின் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.கவில் இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் இன்று சங்கமமானார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 வயதான பன்னீர்செல்வம் கடந்த 1973ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்தவர்.
அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
(வீடியோ இங்கே )