அடங்காத ஈரான். அடக்கி ஆள நினைக்கும் அமெரிக்கா. நடக்கப்போவது தான் என்ன?
சில நேரம் அடிச்சுத்தான் ஆகணும்!" - கௌராவப் பிரச்சினையால் அவதிப் படும் டிரம்ப்! மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மிக உக்கிரமாகச் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை உலக நாடுகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
"ஈரான் விடயத்தில் நான் சற்றும் மகிழ்ச்சியாக இல்லை, சில நேரங்களில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்" என டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் கக்கிய நெருப்பு! இன்று வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 27, 2026) வெள்ளை மாளிகையிலிருந்து டெக்சாஸ் (Texas) மாநிலத்திற்குப் புறப்படுவதற்காகத் தனது ஹெலிகாப்டரை நோக்கிச் சென்ற டிரம்ப், அங்கிருந்த செய்தியாளர்களிடம் ஆக்ரோஷமாகப் பேசினார்.
நேற்று ஜெனீவாவில் நடந்த அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகள் முடிந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார். "ஈரான் நடந்துகொள்ளும் விதம் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை (Not thrilled). அவர்கள் இன்னும் திருந்துவதாகத் தெரியவில்லை" என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
"Sometimes you have to" - டிரம்ப்பின் போர்ப் பிரகடனம்! செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் சொன்ன ஒரு வாசகம்தான் இப்போது சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
ஈரானுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "இராணுவ ரீதியான தாக்குதலை நான் விரும்பவில்லை, ஆனால் சில நேரங்களில் (தாக்குதலை) நடத்தித்தான் ஆக வேண்டும் (Sometimes you have to)" எனப் பதிலளித்தார்.
டிரம்ப்பின் இந்த 'ஒற்றை வாசகம்' ஈரானுக்கு விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் வழிக்கு வராவிட்டால், அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு 'குண்டுமழை' பொழிவதாகவே இருக்கும் என்பதை அவர் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
பின்னணியில் நடக்கும் அவசர வெளியேற்றங்கள்! டிரம்ப்பின் இந்தப் பேட்டி வெளியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர்தான், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க அதிகாரிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபீ உத்தரவிட்டிருந்தார்.

அதேபோல், ஈரானில் உள்ள தனது குடிமக்களை வெளியேறுமாறு சீனாவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தொடர்ச்சியான வெளியேற்றங்களுக்கு மத்தியில் டிரம்ப் இவ்வாறான ஒரு 'ஆக்ரோஷமான' பேட்டியை வழங்கியுள்ளமை, அடுத்த 24 முதல் 48 மணிநேரத்திற்குள் ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை அரங்கேறலாம் என்ற அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
கடைசிச் சந்தர்ப்பம்? இருந்த போதிலும், "இன்று ஒருவேளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கிறேன், எனக்கு ஒரு ஒப்பந்தத்தை (Deal) எட்ட விருப்பம்தான்" என டிரம்ப் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஈரானுக்கு அவர் ஒரு இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார். ஆனால், அரேபியக் கடலில் அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில், ஈரானின் நிலைப்பாட்டைப் பொறுத்தே அடுத்த கட்டம் அமையும்.
ஆனால் ஈரான் மக்களோ பலர் போர் வேண்டாம் என்ற மன நிலையோடுதான் இருக்கிறார்கள். சிலரோ ஈரான் தலைவர்போல வாழ்வதா னான் அணுவாயுதத்தோடு இல்லையேல் சாகவும் தயார். அல்லா அவனுக்கு மட்டுமே அடங்குவோம் என உள்ளார்கள். இருந்து பார்ப்போம் எதுவாயினும் சில நாட்கள் பதில் கூறும்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்