இன்றைய ராசிபலன் (01.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்:
அசுவினி: மகிழ்ச்சியான நாள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பரணி: உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். பயணத்தில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானம் திருப்திதரும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தோர் ஆதரவால் தைரியம் கூடும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். திருவாதிரை: வெளியூர் பயணம் நன்மை தரும். பழைய கடன்களை அடைப்பீர். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். செலவிற்கேற்ற வரவு வரும்.
கடகம்:
புனர்பூசம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த பணம்வரும். பூசம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். ஆயில்யம்: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும்.
சிம்மம்:
மகம்: விரய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். பூரம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். உடன்இருப்போரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: அமைதியாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம்: நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர். பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: நேர்மையாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
துலாம்:
சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். சுவாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: நெருக்கடிகள் நீங்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். கேட்டை: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.
தனுசு:
மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பூராடம்: மனக்குழப்பம் ஏற்படும். நன்றாக பழகியவர்களும் உங்களை புரிந்து கொள்ளாமல் போவர். உத்திராடம் 1: இன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது. நெருக்கடி அதிகரிக்கும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: இன்று உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும். திருவோணம்: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். அவிட்டம் 1,2: எதிலும் இன்று அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: சாதகமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சதயம்: வியாபார பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர். பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.
மீனம்:
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.
ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
(வீடியோ இங்கே )