15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை - போலந்து அரசாங்கத்தின் புதிய சட்டம்

#children #world_news #government #Law #Social Media #Ban #Poland #ADDA #shelvazug #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
4 hours ago
15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை - போலந்து அரசாங்கத்தின் புதிய சட்டம்

போலந்தில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சிறுவர்களின் மனநலம் மற்றும் அறிவுசார் திறன் பாதிக்கப்படுவதைக் கருத்திற்கொண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர்களின் வயதைச் சரிபார்க்கத் தவறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட வரைபு (27) சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இச்சட்டம் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அவுஸ்திரேலியா இத்தகைய சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இது குறித்து ஆராய்ந்து வருவதாக ரொய்ட்டரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!